தாம்பரம் சண்முகம் சாலையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்... காரணம் என்ன?!!

தாம்பரம் சண்முகம் சாலையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்... காரணம் என்ன?!!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி தாம்பரம் சண்முகம் சாலையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.  செங்கல்பட்டு வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் மாலிக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக இப்போது எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களுடைய பகுதியானது இயற்கை சார்ந்த பகுதி எனவும்
அங்கு ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களும் ஆயிரம் ஏக்கர் குடிநீர் பகுதியும் கொண்ட பகுதி எனவும் தெரிவித்த அவர் இது போன்ற பகுதியை அழித்துவிட்டு எங்களுக்கு விமான நிலையம் அமைப்பது முக்கியமில்லை என பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

எனவே அந்த கிராம மக்களின் நிலைமையை கருத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக மாற்று இடத்தை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க:   காவல் நிலையத்தில் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...!!!