மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவன்; நேரில் சென்று எஸ்.பி விசாரணை...

தோப்பூரில் மர்மமான முறையில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவ இடத்தில் தூத்துக்குடி எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார்.

மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவன்; நேரில் சென்று எஸ்.பி விசாரணை...

தூத்துக்குடி | திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளியில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழந்தார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவவவ்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தோப்பூர் ஆதிதிராவிட நல அரசு தொடக்கப் பள்ளியில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். உயிரிழந்த மாணவன் அஜய்குமாருடன் உடன் இருந்த  இரண்டு மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் படிக்க | நிறைவேறியது பீலேவின் இறுதி ஆசை.. ! 9 ஆவது மாடியில் கல்லறை கேட்டுப்பெற்ற காரணம்

எது எடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தோப்பூரில் பள்ளி வளாகத்தில் மாணவன் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்ததாக என்ற பிரிவில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் டிஎஸ்பி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நேரில் விசாரணை நடத்தி உள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு மேற்கொண்டு விசாரணை தொடங்கப்படும் என தெரிவித்தார். ஆறுமுகநேரி தொண்டு நிறுவன உரிமையாளர் வெட்டப்பட்ட வழக்கில் ஏழு பேரை கைது செய்துள்ளோம் என தெரிவித்தவர் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 2 வாரத்தில் அரசு வேலை வழங்கப்படும் உதயநிதி - மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி