இல்லம் தேடிக் கல்வி திட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி...!!

இல்லம் தேடிக் கல்வி திட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி...!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி  திட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இல்லம் தேடிக் கல்வி சார்பில், கற்றலில் பின் தங்கிய மாணவர்களை ஊக்குவித்து அவர்களது கற்றல் இடைவெளியைக் குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் நல்ல பலனைக் கொடுத்து வருவதால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தன்னார்வலர் ஈஸ்வரி, தனது உயர் தொடக்க நிலை மையத்திற்கு வருகை புரியும் மாணவ மாணவியரைக் கொண்டு இக்கல்வியாண்டு முழுவதும் கற்றுக் கொண்ட அறிவியல் பாடத்தின் அடிப்படையில் ஒரு கண்கட்சியை இங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அமைத்திருந்தார்.

கண்காட்சியை இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ மாணவியர் காட்சிப்படுத்தியிருந்தனர். இதனை தன்னார்வலர்கள், நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.