சாலையில் வீறுநடை போட்ட யானையைப் பார்த்து, தலைதெறிக்க ஓடிய மக்கள்...

புத்தாண்டு காலையில் சாலையில் உலா வந்த காட்டு யானை.பிக்கப் வாகனத்தை இடித்து தள்ளியது வாகனத்தில் இருந்தவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

சாலையில் வீறுநடை போட்ட யானையைப் பார்த்து, தலைதெறிக்க ஓடிய மக்கள்...

நீலகிரி | கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இவ்வாறு வரும் யானைகள் குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருவதுடன் மனிதர்களையும் தாக்குவதால் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூடலூர் பகுதியில் ஒய்யாரமாக சாலையில் நடந்து வந்து நானும் புத்தாண்டை கொண்டாடுவேன் என்று ஒற்றை காட்டு யானை ஒய்யாரமாக நடந்து சென்று சாலையில் வந்த பிக்கப் வாகனத்தை இடித்து தள்ளியது வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

பிறகு யானை சாலையோர வனப்பகுதிக்குள் சென்றது. இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | திருப்பதி கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு - மகாராஷ்டிரா முதலமைச்சர், தமிழ்நாடு அமைச்சர் தரிசனம்..!