விதவைப் பெண்களுக்கு தனி ஆணையம் - முப்பெரும் விழாவில் தீர்மானம்...

விதவைப் பெண்களுக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என நாகையில் நடைபெற்ற யாதவ ஆலோசனை மையத்தின் முப்பெரும் விழாவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விதவைப் பெண்களுக்கு தனி ஆணையம் - முப்பெரும் விழாவில் தீர்மானம்...
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் யாதவ ஆலோசனை மையத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இலவச வழிகாட்டி புத்தக தொகுப்பு 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச மணமாலை மணமகள் மணமகன் அறிமுக விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த இந்த அமைப்பின் மாநில உயர்மட்ட ஆலோசகர்  ராமசாமி அண்ணாதுரை கூறியதாவது

விதவைப் பெண்களுக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும்,

ஜாதி வாரி  கணக்கெடுப்பு எடுத்து முடிப்பதற்கு முன்னதாகவே யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,

அவர்களின் பொருளாதார நிலையை கருதி கொண்டு கால்நடை வளர்ப்பில் முன்னோடிகளாக திகழும் யாத சமுதாய மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

என அவர் கூறினார் இந்த முப்பெரும் விழாவில் தமிழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com