மோப்ப நாய் ‘டோனி’க்கு 21 துப்பாக்கி குண்டு வெடித்து இறுதி மரியாதை...

ஆவடி காவல் ஆணையரகத்தில் இருதய கோளாறு காரணமாக இறந்த மோப்ப நாய் டோனிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸார் இறுதி மரியாதை செய்தனர்.
மோப்ப நாய் ‘டோனி’க்கு 21 துப்பாக்கி குண்டு வெடித்து இறுதி மரியாதை...
Published on
Updated on
2 min read

சென்னை | ஆவடி காவல் ஆணையரகத்தில் துப்பறியும் பிரிவில் டோனி என்ற மோப்ப நாய் பணியாற்றியது. இந்த நிலையில், சனிக்கிழமை டோனி வயது 8 இருதயக் கோளாறு காரணமாக மருத்துவ சிகிச்சை பலனின்றி இறந்தது.

சென்னை மாநகர காவல் மோப்ப நாய் பிரிவில் பிறந்த 45 நாட்கள் ஆன நிலையில் டோனி சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்து வந்தது. பின்னர், கடந்த மே மாதம் 2ஆம் தேதி டோனி மோப்ப நாய் ஆவடி காவல் ஆணையரத்தில் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு,சிறந்த துப்பறிவாளராக பணியாற்றி வந்தது.

இந்த நாய் 8 ஆண்டு காவல் துறை பணியில் கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் உட்பட 35 வழக்கில் விசாரணைக்கு உதவியாக செயலாற்றி உள்ளது. 2017 ஆம் ஆண்டு டோனி மாநில அளவில் காவல்துறையில் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றது.

மேலும், 2020 ஆம் ஆண்டு அடையாறில் நடைபெற்ற கெனல் கிளப் மீட்டில் 2ஆம் இடத்தில் பெற்றது என்று நினைவு கூர்ந்தார் சந்தீப் ராய் ரத்தோர். இதையடுத்துஇறந்த டோனிக்கு ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் சகாதேவன், மோப்ப நாய் பயிற்சியாளர் தனசேகர் ஆகியோர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

மேலும், இறந்த டோனியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி போலீஸார் சார்பில் செலுத்தப்பட்டது. பின்னர், இறந்த மோப்பநாய் டோனியின் உடல் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர்களின் பயிற்சிக்காக தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com