சமூக சேவகன் தற்கொலை முயற்சி..இவங்கதா காரணம் என் சாவுக்கு..வீடியோ வாக்குமூலம்..

சமூக சேவகன் தற்கொலை முயற்சி..இவங்கதா  காரணம் என் சாவுக்கு..வீடியோ வாக்குமூலம்..

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரை அவதூறாக பேசி மிரட்டியதால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த சமூக சேவகரான கணேசன் (52) பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்த நிலையில் குண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தான் தாக்கப்பட்டது தொடர்பாக கணேசன் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், துரைப்பாக்கம் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் கணேசனை அவதூறாகப் பேசி இனி புகார் அளிக்க வந்தால் உன் மீது வழக்குப்பதிவு செய்வேன் என கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கணேசன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விஷம் குடிப்பதற்கு முன் கணேசன் பதிவு செய்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பு ஆகியது.

உதவி ஆய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சியும், குண்டர்களின் தாக்குதலுக்கு அஞ்சியும் அடிவாங்கி வாழ்வதை விட சாவதே மேல் என வீடியோவில் சமூக சேவகர் கணேசன் பேசியுள்ளார்.இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோக நிலையில் உள்ளனர்.