வடகிழக்கு பருவமழையால் தத்தளிக்கும் தென்தமிழகம்...

வடகிழக்கு பருவமழை தற்போது கனமாக பெய்து வரும் நிலையில், தென் தமிழ்நாடின் பல பகுதிகள் மழைநீரில்ல் தத்தளித்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையால் தத்தளிக்கும் தென்தமிழகம்...

திருவாரூர் :

திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளான விளமல், புலிவலம், அடியக்கமங்கலம், கிடாரங்கொண்டான், காட்டூர் போன்ற பகுதிகளில் பரவலாக காற்றுடன் கனமழை பெய்த்து. மேலும் இந்த கனமழையால் தெருகளில் மழைநீர் ஆறுகள் போல் ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | 12 லட்சம் குளோரின் மாத்திரைகளை வழங்கிய குடிநீர் வாரியம்...

நாகப்பட்டினம் :

கடந்த மூன்று தினங்களாக  நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் மழை ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் மிதமானமழை  துவங்கி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தை பொருத்தவரை நாகப்பட்டினம் வேளாங்கண்ணி திருப்பூண்டி வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது அதிகபட்சமாக திருப்பூண்டியில் 9 மில்லி மீட்டர் மழை தலைஞாயிறு 4 மி.மீ வேதாரண்யம் இரண்டு மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் படிக்க | மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு...

கரூர் :

கரூரில் காலை முதலே வானம் கருமேகத்துடன் காணப்பட்டது இந்நிலையில் 9 மணி அளவில் மழை பிடித்து கொண்டு கொட்டிவருகிறது கரூர் நகர பகுதிகளில் மட்டுமல்லாமல் புலியூர், உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம், வாங்கல் போன்ற பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கரூரில் சில நாட்களாகவே இரவில் கடும் குளிரும் பகலில் வெயிலும் கலந்த சீதோசன நிலை நிலவி வந்தது. இன்று எதிர்பாராத வகையில் மழை பெய்வதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | “தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க..." - அமைச்சர் சேகர் பாபு

தஞ்சாவூர் :

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை தஞ்சை நெய்வாசல்  அதிராம் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையாக விட்டுவிட்டு பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் தற்போது தஞ்சை திருக்காட்டுப்பள்ளி பூதலூர் ஒரத்தநாடு வல்லம் கல்லணை திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழையாக பெய்து வருகிறது. சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி.

மேலும் படிக்க | மழையால் இடிந்து விழுந்த வீடு...! பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு..!