சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன...

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி பெறுவதால் சிங்கம்புணரி ராமர் கோவிலில் அருள் பாலிக்கும் தம்பதி சமேத சனீஸ்வரர் நீலா சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன...
Published on
Updated on
1 min read

சிவகங்கை | சிங்கம்புணரி அண்ணா நகரில் அருள்வாக்கும் ஸ்ரீ ராமர் திருக்கோவிலில் அமைந்துள்ள நவகிரக பரிகாரத்தலமான இந்த கோவிலில் நவகிரகங்கள் அனைவரும் தம்பதி சமோதரராய் அருள்பாளிப்பது சிறப்பாகும்.

இந்த கோவிலில் இன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஜென்ம சனியாக பிரவேசிப்பதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அந்த பூஜையில் ஹோமத்தில் நீலா சனீஸ்வருக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவகிரக பரிகார ஹோமம், சனி நிவர்த்தி பரிகார ஹோமம் முடிந்து பூர்ணகுதியுடன் யாக வேள்விகள் நிறைவு பெற்றன.

அதைத் தொடர்ந்து பூஜை  செய்யப்பட்ட கலசங்கள் கோவிலை வலம் வந்த உடன் நீலா சமேத சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதை தொடர்ந்து கலச அபிஷேகங்களும் நிறைவு பெற்றது. அதன் பிறகு ராஜ வேடத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி நீலா உடனான சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது.

கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சனி பெயர்ச்சி பரிகார ஹோமங்களில் பங்கேற்று பரிகார பூஜைகள் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அருட்பிரசாதங்களும் அன்னதானமும் நடைபெற்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com