நாங்குநேரியில் மாநில அளவிலான பாரம்பரிய மல்யுத்த போட்டி..

நாங்குநேரியில் மாநில அளவிலான பாரம்பரிய மல்யுத்த போட்டி..
Published on
Updated on
1 min read

நெல்லை | நாங்குநேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான பாரம்பரிய மல்யுத்த போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு பாரம்பரிய மல்யுத்த கழகம் சார்பில் நாங்குநேரி உள்ள வாகைகுளம் பன்னிரு பிடி ஐயன் கலைக் கல்லூரியில் இன்று மல்யுத்த போட்டிகள் நடத்தப்பட்டது.

கல்லூரி செயலர் நன்மாறன் முதல்வர் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி மல்யுத்த களத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.

இதில் 20 வயதுக்கு மேற்பட்ட 500க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டி நெல்லை மாவட்டத்திலேயே முதன்முதலாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ்நாடு மல்யுத்த கழக மாநில செயலாளர் கோபிநாதன் மாவட்ட செயலாளர் லோகநாதன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவர்கள்  உள்பட பலர் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com