போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி...! மாணவர்கள் பங்கேற்பு..!

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி...!  மாணவர்கள் பங்கேற்பு..!

நாகப்பட்டினத்தில் உள்ள  தனியார் கல்லூரி சார்பில் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை 1000 மாணவர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரி சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய படி பேரணியாக சென்றனர். மேலும் போதை பொருளை ஒழித்து, சமுதாயத்தை காப்போம் போன்ற பல்வேறு வாசகத்துடன் அடங்கிய பதாகைகளை எழுதியபடி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பால்பண்ணைச்சேரி, காடம்பாடி, வெளிப்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

இதையும் படிக்க : சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு வந்த யானை...!  உடல் நலக் குறைவால் பாதிப்பு..!