பழுதான பேருந்தை தள்ளிவிட்டு பயணம் செய்த மாணவர்கள்...

கந்தர்வகோட்டை பகுதியில் பழுதான பேருந்தை மாணவர்கள் தள்ளிவிட்டு இயக்கிய அவலம் அரங்கேறியுள்ளது.
பழுதான பேருந்தை தள்ளிவிட்டு பயணம் செய்த மாணவர்கள்...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை | கந்தர்வகோட்டை பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கந்தர்வகோட்டை பகுதிக்கு தினந்தோறும் பேருந்தில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று கந்தர்வகோட்டையில் இருந்து கறம்பக்குடி பகுதிக்கு மாலை 6.30 மணிக்கு செல்லும் G2 என்ற அரசு பேருந்து பழுதடைந்ததால் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தை தள்ளிவிட்டு பின்பு அதில் பயணம் செய்தனர்.

இதனால் அப்பேருந்து சிறிது நேரம் தாமதமாக சென்றது. மேலும் பள்ளி மாணவர்கள் சென்றுவரும் பேருந்துகள் இதுபோல் அவ்வப்போது ஏற்படுவதால் உரிய நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பழுதடைந்த வாகனத்தை இதுபோன்று தள்ளும் நிலை இருப்பதாகவும் இதற்கு உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com