தொடரும் குட்கா பறிமுதல்கள்... தடைசெய்யப்பட்ட 1500 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்...

தொடரும் குட்கா பறிமுதல்கள்... தடைசெய்யப்பட்ட 1500 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்...
Published on
Updated on
1 min read

கோவை | சூலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1500 கிலோ குட்கா புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர் சூலூர் டிசம்பர் 8 தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் அதிக அளவில் விற்பனை நடந்து வருவதால் போலீசார் அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்  உத்தரவின் பெயரில் தனிப்படை எஸ்.ஐ. குப்புராஜ் தலைமையிலான  போலீசார் சூலூர் பகுதியில்  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூலரை அடுத்த பெரியகுயிலி பகுதியில் அதிக அளவில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தனிப்பட்ட போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்த செலகரிச்சல் பகுதியைச் சேர்ந்த குருநாதன் உத்தம்ராஜ், குரும்பபாளையத்தைச் சேர்ந்த சிவக்கு, இருகூரைச் சேர்ந்த செல்வகுமார், சௌரி பாளையத்தைச் சேர்ந்த சுதாகரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை செய்ததில் இவைகள் அனைத்தும்  கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்டு சூலூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சூலூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com