ராமநாதசுவாமி கோவிலில் நடந்த சூரசம்கார நிகழ்ச்சி...

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவில் அருகே சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதசுவாமி கோவிலில் நடந்த சூரசம்கார நிகழ்ச்சி...

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோவிலின்  நந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சன்னதியில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று நடைபெற்றன. அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தனை அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

சஷ்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இன்று மாலை  கோவில் அருகாமையில் முருகப்பெருமான்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அதன்பின் சூரனின் தலையை கொய்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முருக பெருமாளை மூன்று முறை சுற்றி வந்த சூரனின் சிலையிலிருந்து தலையை கோவில் குருக்கள் வேல் கொண்டு குத்தி துண்டித்து சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com