தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு பணி தொடக்கம்...

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குர்த்தி தேசிய பூங்காவில் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு பணி தொடக்கம்...

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் உள்ள  முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்கா வனப்பகுதிகளில் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

காலை 6:00 மணி முதல் 11மணி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என 33 குழுக்களாக பிரிந்து நேர்கோட்டு பாதையில் ( TRANSECT LINE) நீரோடிகளில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.

தரைவாழ் பறவைகளுக்கு  முதன்முறையாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பின்படி எத்தனை வகையான தரைவாழ் பறவைகள் வாழ்கின்றன என்பதை குறித்து ஆய்வு அறிக்கை தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...