மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்...

தேன்கனிக்கோட்டை அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு, கட்டி தழுவி பழைய நினைவுகளை நண்பர்கள் பகிர்ந்தனர்.

மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்...

கிருஷ்ணகிரி : தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1943 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடந்தது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் 500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பழைய நண்பர்களை சந்தித்து கட்டி தழுவி உணவுகளை ஊட்டி விட்டு மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க | நாயை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு குவியும் பாராட்டுகள்...

பின்னர் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறைகளுக்கு சென்று, அமர்ந்து, நினைவுகளை பகிர்ந்தனர். அதனை தொடர்ந்து பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு பள்ளிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்து கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் நாராயணா, உதவி தலைமையாசிரியர் ராஜரத்தினம், பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் மாதேசன், பள்ளி ஆசிரியர் சங்க செயலாளர் நாகமுனீந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | கல்யாணி யானை உடல்நிலை பரிசோதனை...! எடை குறைக்க அறிவுறுத்தல்..!