ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா....!!

ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா....!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.   இங்கு இயங்கிவரும் மோகனம் கலாச்சார மையம் சார்பில் தமிழர் பாரம்பரிய திருவிழா தொடங்கியது.   இதனை புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். 

இரண்டு நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழர் பாரம்பரிய உணவுகள் பாரம்பரிய கலைகள் , விளையாட்டுகள் தமிழர் கலாச்சார முறைகள் பற்றி வாழ்வியல் முறைகள் பற்றியும் இந்த நிகழ்வில் இடம்பெற உள்ளன.  இந்த விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் ஆரோவில் வாசிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க:   மீண்டும் களைக்கட்ட துவங்கிய மீன் பிடி திருவிழா...!!!