டாஸ்மாக் கடையை மூடி சீல் வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது...

குன்னூர் அருகே சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த டாஸ்மாக் கடையை வருவாய்த் துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

டாஸ்மாக் கடையை மூடி சீல் வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது...

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயண்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயண்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மாவட்டத்தில் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் போன்ற பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் பயண்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே வண்டிச்சோலை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக்கடை சுகாதாரமற்ற முறையில் நடத்திவருவதாக புகார் எழுந்தது.  அங்கு சென்ற வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்... போராட்டக் களமாக மாறிய சுற்றுலா தளம்...

டாஸ்மாக் கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி அவற்றை வனபகுதிக்குள் வைத்து எரித்ததாலும் டாஸ்மாக் கடைக்கு சீல் வைத்து குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்ந்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே கடை திறக்க உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | ரோப் கார் திட்டத்திற்கான இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள்...