12 வாரங்களில் கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும்- உயர்நீதிமான்றம் உத்தரவு...

தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமாக உடுமலைப்பேட்டை அருகே உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை 12 வாரங்களில் கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12 வாரங்களில் கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும்- உயர்நீதிமான்றம் உத்தரவு...

பழனி: தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமாக கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள மெய்வாடி கிராமத்தில் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில்  சுவாமிக்கு இனாமாக வழங்கப்பட்ட இந்த நிலத்தை இனாம் ஒழிப்பு சட்டத்தில் எடுக்க 1963ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. 

இந்நிலையில், நிலத்தின் உரிமையாளர் எனக் கூறி, செல்லப்பன் என்பவர், 15 ஆயிரம் ரூபாய்க்கு பழனிச்சாமி என்பவருக்கு 1988ம் ஆண்டு அடமானம் வைத்துள்ளார். இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை உடுமலைப்பேட்டை நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. 

மேலும் படிக்க | வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்...!

இதை எதிர்த்து, கோவில் இணை ஆணையர் தாக்கல் செய்த  வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், நிலம் கோவிலுக்கு சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் மோசடியாக பெற்ற உத்தரவு நிறைவேற்ற முடியாத உத்தரவு எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

6.5 ஏக்கர் நிலம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சொந்தமானது எனத் தெரிவித்த நீதிபதி, 12 வாரத்துக்களில் நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | துப்பாக்கிச் சூடு சம்பவம்...ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்!