குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்...

குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்...

தென்காசி | மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் சுற்றுலா பயணிகள் காலை முதலே அருவிகளில் படையெடுக்க தொடங்கினர். இதனால் குற்றாலம் மெயின் அருவியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது விடுமுறையை கொண்டாடும் வகையில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

அதிகாலை முதல் காலை 10 மணி வரையில் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடுவதற்காக பல ஆயிரம் ஐய்யப்ப பக்தர்கள் குவிந்ததால் அருவிக்கரை பகுதிகள் சபரிமலை போன்று காட்சி அளித்தது.

மேலும் படிக்க | ஆங்கில புத்தாண்டில் பூக்குழி விழாவிற்காக கோவில்களில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்...