மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு...
Published on
Updated on
2 min read

தென்காசி : வாசுதேவநல்லூரை சேர்ந்த திவான்பக்கீர் என்பவரது மகன் சாகுல் ஹமீது. இவருக்கும் புளியங்குடி டி.என்.புதுக்குடியை சேர்ந்த துரைமீரான் வயது 36 என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அப்ரா சப்ரீம் என்ற 11 வயதில் பெண் குழந்தை உள்ளது.

குடும்ப பிரச்சினை தொடர்பாக துரை மீரான் புளியங்குடியில் தனது தந்தையுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் துரை மீராளின் கணவர் சாகுல்ஹமீது 2வது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கணவருடன் தன்னையும், மகளையும்  சேர்த்து வைக்ககோரி  கூறி துரை மீரான் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த துரை மீரா ள் தனது மகளுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்ததுடன் இருவரின் உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் துரை மீராளிடம் இருந்து மண் எண்ணெய் கேனை பிடுங்கியதுடன் உடலில் தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர். இதுகுறித்து துரை மீரா ள் கூறுகையில்,  தனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆவதாகவும் கணவர் வெளிநாடு சென்று வேலை செய்து வந்தார். தற்போது மூன்று வருடங்களாக தென்காசியில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் தங்க நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் என வரதட்சணை கொடுத்த நிலையிலும் மேலும் வரதட்சனை கேட்டு மாமியோரோடு சேர்த்து கணவர் தன்னை கொடுமை செய்து வருகிறார். மேலும் இது குறித்து புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தான் குழந்தை பிறந்த நிலையில் அழகாக இல்லை என்று கூறி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனவே தனது பிள்ளையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் காவல்துறையினர் அலட்சியம் காரணமாக பெண் மண்ணெண்ணெய் கேனுடன் வளாகத்திலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com