முப்படை தலைமை தளபதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்...! பல்வேறு உதவிகள் வழங்கிய இராணுவ பயிற்சி கல்லூரி முதல்வர்...!

முப்படை தலைமை தளபதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்...! பல்வேறு உதவிகள் வழங்கிய இராணுவ பயிற்சி கல்லூரி முதல்வர்...!

நீலகிரி மாவட்டத்தில் மறைந்த மூப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர்களது  முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நஞ்சப்பசத்திரம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கு இராணுவ பயிற்சி கல்லூரி முதல்வர் வழங்கினார்.

கடந்த ஆண்டு இதே நாளில், அதாவது டிசம்பர் 8 ஆம் தேதி அன்று வானிலை மோசமானதன் காரணமாக குன்னூர் நஞ்சப்பசத்திரம் அருகே முப்படை தளபதி உட்பட 14 பேர்  இராணுவ ஹெலிக்ப்பட்ர்  விபத்திற்குள்ளாகி அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து தங்களின் வீடுகளில் இருந்த கம்பளிகள் மற்றும் போர்வைகள் கொண்டு உடல்களை மீட்க  உதவி செய்தனர். இதனை போற்றும் வகையில் இராணுவத்தினர் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் செய்து வந்தனர்.

 இந்நிலையில் ஹெலிக்கப்பட் ர் விபத்து ஏற்பட்டு ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி  நஞ்சப்பசத்திரம் பகுதியில் இராணுவ பயிற்சி கல்லூரி முதல்வர் வீரோந்திர வாட் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித், மாவட்ட காவல் துறை  கண்கானிப்டாளர் ஆசிஸ் ராவத், ஆகியோர்மூப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இதையும் படிக்க : பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு...! எந்தெந்த பல்கலைக்கழகம்...?