எலிவால் அருவியில் நீர்வரத்து குறைவு....! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...!

எலிவால் அருவியில் நீர்வரத்து குறைவு....! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்சி மலை பகுதியில் போதிய மழை பெய்யாத நிலையில் மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான எலிவால் அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் டம்டம் பாறை பகுதியில் வாகனத்தை நிறுத்தி அருவியை கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்து செல்வது வழக்கம். 

இந்நிலையில் டம்டம் பாறைக்கு எதிரே உள்ள எலிவால் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 20 நாட்களாகவே போதிய அளவு மழை பெய்யாத நிலையில் அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படுவதால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அருவியில் புகைப்படம் எடுக்க முடியாமலும், நீர்வீழ்ச்சியின் அழகை காண முடியாமலும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.