ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பணியாளர்கள் தினுசாக கையில் எடுத்த ஐடியா...என்ன தெரியுமா!!!

ஓய்வுதிய  திட்டத்தை அமல்படுத்த கோரி பணியாளர்கள் தினுசாக கையில் எடுத்த ஐடியா...என்ன தெரியுமா!!!
Published on
Updated on
2 min read

மீண்டும் பழைய ஓய்வதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தலைமை செயலக பணியாளர்கள் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கை அடங்கிய அட்டையை சட்டையில் குத்தியவாறு இன்று முதல் மூன்று நாட்களுக்கு பணியாற்ற உள்ளனர், அதில் மத்திய அரசு 1.7.22 முதல் வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியினை வழங்க வேண்டுமெனவும், காலவரையின்றி முடக்கி வைக்கபட்டுள்ள சரண் விடுப்பினை வழங்க வேண்டுமெனவும்,  மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக  அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையுடன் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க 5000 பணியாளர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க இந்த முதல் கட்ட நடவடிக்கைகள் கோரிக்கை அட்டையை அணிந்துள்ளோம், முதலமைச்சர் பரிசிலிப்பார் என நம்புவதாகவும், ஒருவேளை இல்லாவிட்டால் செயற்குழு கூடி அடுத்தகட நடவடிக்கைகளை அறிவுக்குமென கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com