திமுக வார்டு உறுப்பினரின் கணவரை வெறி கொண்டு தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்... காஞ்சிபுரத்தில் கலவரமாக மாறிய கல்வெட்டு சம்பவம்..!

திமுக வார்டு உறுப்பினரின் கணவரை வெறி கொண்டு தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்... காஞ்சிபுரத்தில் கலவரமாக மாறிய கல்வெட்டு சம்பவம்..!

திமுக வார்டு உறுப்பினரின் கணவரை வெறி கொண்டு தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்... காஞ்சிபுரத்தில் கலவரமாக மாறிய கல்வெட்டு சம்பவம்..!

கொலை வெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் 

காஞ்சிபுரத்தில் அங்கன் வாடி மையத்தில் கல்வெட்டு வைப்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில் திமுக வார்டு உறுப்பினரின் கணவரை, ஊராட்சி மன்ற தலைவர் கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக புல்லட் தீனா என்கிற தேவேந்திரன் செயல்பட்டு வருகிறார். 

புதிய அங்கன்வாடி திறப்பு

இக்கிராம ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதனை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைக்க இருந்தனர். 

அங்கன்வாடி மையத்தில் திறப்பு விழா பெயர் பலகை கல்வெட்டு அமைக்கும்படி எட்டாவது வார்டு உறுப்பினர் பிரியாவின் கணவர் அம்சநாதன் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் கல்வெட்டு வைக்கப்பட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கொலை வெறி தாக்குதல் நடத்திய தேவேந்திரன் 
 
கல்வெட்டு வைக்கும் போது வார்டு உறுப்பினரின் கணவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கன்வாடி திறந்து மூன்று நாட்களுக்கு பின்னர் அம்சநாதன் இரு சக்கர வாகனத்தில் வரும்போது தேவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்கு வாதம் முற்றி அனைவரும் சேர்ந்து அம்சநாதனை தாக்கியதில் பலத்த காயமடைந்தவர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மீண்டும் தாக்கப்பட்ட அம்சநாதன் 

தேவேந்திரனின் உறவினர்கள் அனைவரும் கடந்த இரண்டு நாட்களாக அவர் வீட்டில் தங்கி இருந்து இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அம்சநாதனை மீண்டும் தாக்கினர். மேலும் அம்சநாதன் குடும்பத்தினர் அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கலவரமாக மாறிய கல்வெட்டு சம்பவம் 

இந்த தாக்குதலில் அம்சநாதனின் மனைவி பிரியா, அவரது மகன், மருமகள் மற்றும் அம்சநாதனின் அக்கா உள்ளிட்ட உறவினர்களுக்கு பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் புகார் பெறப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனையும் அவரது உறவினர்களையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இதனால் அப்பகுதி சிறிது நேரம் கலவரமாக மாறியதைக் கண்டு அருகிலிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். சாதாராண கல்வெட்டு விஷயம் கலவரமாகி கத்தி குத்து மற்றும் மண்டை உடைப்பு என பலத்த காயங்களுடன் முடிவடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com