கூடைப்பந்தாட்டத்தில் உயிரிழந்த வீரர்...!!!

கூடைப்பந்தாட்டத்தில் உயிரிழந்த வீரர்...!!!

நீலகிரி மாவட்டத்தில் கூடை பந்து விளையாடிக்கொண்டிந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. 

நீலகிரி மாவட்டம் உதகை எச்.ஏ.டி.பி., உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், நீலகிரி கூடைப்பந்து சங்கம் இணைந்து மாநில அளவில் மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டி நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 20 அணிகள் பங்கேற்றுள்ளன.  இன்று இரண்டாவது நாள் போட்டியில், மதுரை–கோவை அணிகள் மோதின. 

போட்டி நடந்துகொண்டிருந்த போது, மதுரை அணி வீரர், நேரு ராஜன், திடீரென மயங்கி விழுந்து சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளார்.  இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  

விளையாட்டு வீரர் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிக்க:   இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீதான பாலியல் புகார்... தொடரும் போராட்டம்!!