தரக்குறைவாக பேசிய போலீசார்.. வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்... 

தரக்குறைவாக பேசிய போலீசார்.. வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்... 

தாம்பரம் நீதிமன்றம் வளாகம் நுழைவாயிலில் வழக்கறிஞர்களை ஒருமையில் பேசும் போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


சாலையூர் காவல்  நிலையத்துக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் காட்வின் வழக்கறிஞர்.2018 ஆம் ஆண்டு இவரது வீட்டில் 55 சவரன் தங்க நகைகள் திருடு போனது இது சம்பந்தமாக சேலையூர் காவல நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டு இதுவரை நகைகளை கண்டுபிடிக்காத சேலையூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்த காட்வின் விசாரிக்க சென்ற  போது போலீசார் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | வேலை ஒழுங்ககாக செய்யாததால் இடமற்றாம்... காவலர் மீது அதிரடி நடவடிக்கை...

மேலும் நேற்று இரவு தாம்பரம் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் மூர்த்தி என்பவர் குடும்பத்தினுடன் இருசக்கர வாகனத்தில் சிட்லபாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது  உதவி ஆய்வாளர் பிரபாகர் என்பவர் வாகனத்தை மடக்கி வழக்கறிஞர் என தெரிந்தும் தரக்குறைவாக பேசியதை கண்டிக்கும் வகையில் இன்று தாம்பரம் நீதிமன்றத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.