யானைகளின் அட்டகாசம்; தோட்டத் தொழிலாளர்கள் அவதி!

யானைகளின் அட்டகாசம்; தோட்டத் தொழிலாளர்கள் அவதி!
Published on
Updated on
2 min read

தமிழக கேரள எல்லையில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் வீடுகளுக்குள் செல்ல முடியாமல் அச்சத்திலேயே பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியொட்டியுள்ள அம்பநாடு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டம், தேயிலை தோட்டம் உள்ளிட்ட தோட்டங்களில் வேலை செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் சூழலில், அந்தப் பகுதியில் நேற்று இரவு முதல் காட்டு யானைகள் அட்டகாசமானது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனால் வீடுகளுக்குள் குடியேற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் தற்போது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் சூழலில் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் காட்டு யானைகளுக்கு பயந்து வீட்டிற்குள் செல்ல முடியாமல் குடைகளை பிடித்தபடி வெளியே நின்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வனத்துறையினருக்கு தற்போது தகவல் கொடுத்துள்ளதாகவும், வனத்துறையினர் இந்த பகுதிக்கு வருகை தந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், காட்டு யானைகள் தொந்தரவானது அந்தப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் காட்டுயானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com