புத்தாண்டுக்கு மாமூல் கேட்ட ரவுடிக்கு தலையில் வெட்டு!!!!!!!!

புத்தாண்டு நள்ளிரவு அன்று மாமூல்கேட்டு தகராறு செய்துள்ளார் தினேஷ்.

புத்தாண்டுக்கு மாமூல் கேட்ட ரவுடிக்கு தலையில் வெட்டு!!!!!!!!

எண்ணூர் அன்னைசத்தியவாணி முத்துநகரை சேர்ந்தவர் தினேஷ் வயது 25 இவர் பிரபல ரவுடி பல்வேறு வழக்குகள் இவர்மீது நிலுவையில்  உள்ளன இவர் அன்னை சிவகாமியின் நகரை சேர்ந்த சிறு ரவுடிகளிடம் மாமுல் கேட்பது வாடிக்கை புத்தாண்டு நள்ளிரவு அன்று இதே போல் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார் தினேஷ்.

மேலும் படிக்க | பொன்னேரி அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய 2 மர்மநபர்கள் விசாரணை

மாமூல் கொடுக்காத ராஜேஷ் என்பவரை வெட்ட அறிவாளுடன் பாய்ந்து உள்ளார் அப்போது ராஷேசின் நண்பர்கள் மதன் மணி கருப்புமணி ஆகியோர் தினேஷை மடக்கி பிடித்து அறிவாளை பிடுங்கி சரமாரியாக வெட்டினர்.

மேலும் படிக்க | அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ்

இதில் தினேஷ் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது ஆபத்தான நிலையில் முப்பதுக்கு மேற்பட்ட தையல்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேஷ்வயது 30 மணிவயது 29 இவர்கள் இருவர் மீதும் பலவழக்குகள் உள்ளனமதன், கருப்புமணி , 
ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.