அதிவேகத்தில் பைக் ஓட்டி வந்த இளைஞர்...! தாய் - சேய் பலி...!

அதிவேகத்தில் பைக் ஓட்டி வந்த இளைஞர்...! தாய் - சேய் பலி...!

சென்னை அண்ணா நினைவு வளையம், மேம்பாலம் அருகே காலை 3:30 மணியளவில் 28 வயது பெண் பூங்குழலி அவரது 6 மாத பெண் குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் மோதியதில், அந்த பெண் மற்றும் அவரது குழந்தை இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். என் எஸ் கே நகரில் வசிக்கும் பூங்குழலி, தங்களுக்கு சொந்தமான ஸ்டிக்கர் கடைக்கு கணபதி பூஜைக்காக சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.   

பின்னர் விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவருடன் பயணித்த பெண் ஆகியோர் சென்னை அண்ணா நகர் K4 காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர் மதுபோதையில் (109MG) வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த பூங்குழலி மற்றும் குழந்தையின் உடல்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.