தேனி : அகல ரயில் பாதை பணிகள்...! போக்குவரத்து நிறுத்தம்...!

தேனி : அகல ரயில் பாதை பணிகள்...! போக்குவரத்து நிறுத்தம்...!

தேனி மாவட்டம் போடியில் அகல ரயில் பாதை பணிகள் காரணமாக போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து நிறுத்தம். 

போடியிலிருந்து மதுரை வரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு சுமார் 11 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தேனி வரை பணிகள் முடிவடைந்து, தற்போது தேனி-மதுரை வரையிலான ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தேனி-போடி இடையிலான 16 கிலோமீட்டர் அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கில் இருப்புப் பாதைகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

இதனால் இன்று இரவு11 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை போடியில் இருந்து மூணாறு செல்லும் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. கேரளா இடுக்கி மாவட்டத்திற்கு செல்லும் பிரதான சாலை போக்குவரத்து  தடை செய்யப்பட்டுள்ளதால் இடுக்கி மாவட்டம் பூப்பாறை, ராஜாக் காடு, கஜனா பாறை மற்றும் மூணாறு செல்பவர்கள் குமுளி மற்றும் கம்பம் மெட்டு மாற்று வழி சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.