புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளிக்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி...!

புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளிக்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி...!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ஆம் படை திருத்தலமாகும். மற்ற திருக்கோயில்களில் முருகப்பெருமான் வீற்றுருக்கும் தளங்களில் சூரசம்கார நிகழ்ச்சி இந்த கந்தசஷ்டி நிகழ்வில் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோயிலில் அந்த நிகழ்வின் போது  முருகன் கோயில் மலை மீது தணிந்த மலை என்பதால், அவருக்கு இங்கு மூன்று டன் புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வு அக்டோபர் 30-ஆம் தேதி மாலை-6 மணிக்கு முருகருக்கு, மலைக்கோயில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் அக்டோபர்- 31 ஆம் தேதி திங்கட்கிழமை உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. மேலும் அக்டோபர் 26-ஆம் தேதி இன்று புதன்கிழமை தொடங்கிய கந்த சஷ்டி நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் மூலவர் முருகப்பெருமானுக்கு இன்று புஷ்ப அலங்காரம், அக்டோபர் 27-ஆம் தேதி  மூலவருக்கு பட்டு அலங்காரம், அக்டோபர் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மூலவர் முருகப் பெருமானுக்கு தங்க கவச அலங்காரம், அக்டோபர் 29-ஆம் தேதி மூலவர் முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம், அக்டோபர் 30-ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு சிறப்பு வழிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகதினர் செய்துள்ளனர். மேலும் தினந்தோறும் மலைக் கோவிலில் காவடி, மண்டபத்தில் உற்சவர் சண்முகநாதருக்கு இலட்சார்ச்சனை நிகழ்வு ஆகியவை பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.