இந்தியாவிலேயே முதல்முறையில் சைதாப்பேட்டைக்கு தான் இந்த வசதி வர போகுது..!

இந்தியாவிலேயே முதல்முறையில் சைதாப்பேட்டைக்கு தான் இந்த வசதி வர போகுது..!

அமைச்சரின் மேடை பேச்சு

சென்னை வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 16 படுக்கைகள் கொண்ட புதிய தீவிர அறுவை சிகிச்சை மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேடையில் பேசினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்பொழுது கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது, நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தனியார் மருத்துவமனையின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

தடுப்பூசியே காரணம்

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் கொரொனா தடுப்பூசியை மக்கள் முழுமையாக பயன்படுத்தியதால் தான் தொற்றின் வேகம் தற்பொழுது குறைந்திருப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் மொத்தமாக 96% பேர் முதல் தவணை தடுப்பூசியும்,  92% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இதனால் 90% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் 

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போதும் கூட கொரொனா, ஒமைக்ரான் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது. இதற்கு அரசு மருத்துவமனை மட்டும் இல்லமால் தனியார் மருத்துவமனையின் பங்கும் உள்ளது என்றார். 

மக்களை தேடி

மக்களை தேடி மருத்துவம் வருமுன் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்திய அளவில் தமிழகத்தில் தான் இது போன்ற திட்டங்கள் இருக்கிறது இதற்கும் தமிழ்நாடு அரசு விருது பெற்றிருப்பதாகவும், மேலும், கடந்த 1 ஆண்டில் மட்டும் 10 விருதுகள் மருத்துவ துறையில் பெற்று இருக்கிறோம் என்றும் கூறினார்.

சென்னையில் முதல் மருத்துவமனை

இந்திய அளவில் இரண்டு முதியோருக்கான மருத்துவமனையை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒன்று சென்னையில் சைதாப்பேட்டையிலும், மற்றொன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அமையவுள்ளது.  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முன்னதாகவே சென்னை சைதாப்பேட்டையில் முதியோருக்கான மருத்துவமனை விரைவில் அதன் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

மருத்துவ காப்பீடு

அதேபோல, கிங்ஸ் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட வரும் பன்னோக்கு மருத்துவமனை அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் தென் சென்னைக்கு ஒரு பன்னோக்கு மருத்துவமனையை விரிவாக தமிழ்நாடு அரசு திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | இதுவே மதசார்பற்ற தமிழ்நாடு என்பதற்கான சிறந்த உதாரணம்..!

தமிழ்நாட்டில் மருத்துவ காப்பீட்டின் மூலமாக அதிகப்படியான மக்கள் பயன் பெற்ற வருவதாகவும் மொத்தமாக 810 அரசு மருத்துவமனை மற்றும் 948 தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருவதாக கூறினார். இறுதியாக, சென்னை ஃபோர்டிஸ் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக உடல் உறுப்பு தானம் செய்தவர்களிடமிருந்து சிகிச்சை பெற்று பயன் பெற்ற நோயாளிகளை நேரில் அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.