
சென்னையில் சட்டவிரோதமாக சிம்-பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தொடர்பு கொண்ட 3 இளைஞர்களிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு அழைப்புகள்:
அமைந்தகரை எம்.எம் காலனி மற்றும் பி.பி தோட்டம் பகுதியில் இருந்து அதிகப்படியான வெளிநாட்டு அழைப்புகள் செல்வதாகவும், ஆனால் அவை உள்ளூர் அழைப்புகள் போல் காட்டுவதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்திலுள்ள பூட்டப்பட்ட ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனை நடத்திய அதிகாரிகள்:
சோதனையில் அந்த வீட்டில் இருந்து 4 சிம்-பாக்ஸ், 8 ரௌட்டர், வெளிநாட்டு சிம் கார்டுகள் உட்பட 150 க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியமேடு பகுதியில் உள்ள ஊத்துக்காட்டான் தெருவில் வசித்து வந்த ஜாகீர் ஹுசைன் மற்றும் அவரது நண்பர்களான சுனைத் மற்றும் ஷெரிஃப் உட்பட மூவரிடமும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: இந்தியாவில் தொடரும் நிலநடுக்கங்கள்!!!