
கலை திருவிழாவில் தவில், பறை இசை வாசித்து அசத்திய மாணவர்கள். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் கலைத்திருவிழா நடைப்பெற்றது.
இதில் திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் குழு நடனம் ஆடியும், மாணவர்கள்- தவில், நாதஸ்வரம், பறை இசை வாசித்தும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.