திருவாரூர் : குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து...!

திருவாரூர் : குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து...!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விசலூர் பகுதியில் சாலை ஓரமாக உள்ள குளம் உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை, இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்ற போது விசலூர் பகுதியில் உள்ள குளத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் கவிழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கைக்குழந்தை, ஒரு பெண் உட்பட நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் கை குழந்தையை மீட்க நன்னிலம் தீயணைப்பு துறையினர் சுமார் பத்து நிமிடம் போராடி குழந்தையின் உடலை மீட்டனர். தொடர்ந்து பெண் ஒருவர் பலத்த காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் குழந்தை உட்பட நான்கு பேரும் உயிரிழந்த நிலையில், உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது