வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தை முதல் நாளான இன்று தொடக்கம்...

வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தை முதல் நாளான இன்று தொடக்கம்...

நாகை மாவட்டம்: வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய 9 ஆயிரம் ஏக்கரில் சாப்பாட்டு உப்பு மற்றும் கெமிக்கல் உப்பு தயார் செய்யப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .தற்போது  வடகிழக்குபருவமழை நிறைவுற்று வேதாரண்யம் பகுதியில் வெயில் அடிக்க தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணிகள் நிறைவுற்று என்று தை முதல் நாளை முன்னிட்டு உப்பு வார்முதல் செய்யப்பட்டு உப்பு எடுக்கப்பட்டது. உப்பு உற்பத்தியில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கிணங்க இன்று தை முதல் நாள்ளை முன்னிட்டு உப்பு  உற்பத்தியை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ளனர்.