முன்பை விட வரத்து குறைவானதால் வியாபாரிகள் ஏமாற்றம்...

விராலிமலை ஆட்டுச் சந்தையில் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

முன்பை விட வரத்து குறைவானதால் வியாபாரிகள் ஏமாற்றம்...

புதுக்கோட்டை | விராலிமலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விற்பனையும் வரட்டும் குறைவாகவே காணப்பட்டது.

ஆகவே பொதுவாகவே இவர் வழிமுறை சந்தை என்றால் அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முந்தைய நாள் இரவு முதலே ஆடுகளை வாங்கவும் விற்கவும் ஆர்வம் காட்டுவார்கள். அதேபோல் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் அதிக அளவு வந்தாலும் அதை வாங்க பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை.

மேலும் படிக்க | மூன்றாவது நாளாக கோடை மழை .... மகிழ்ச்சியில் விவசாயிகள்...!!

விராலிமலை ஆட்டுச் சந்தை என்றாலே குறைந்தது ஒரு கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும். ஆனால் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் 50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் கூறுகின்றன. 20 கிலோ ஆடையின் விலை 15 ஆயிரம் வரை விற்கப்பட்டது

அடுத்த மாதங்களில் இருந்து பல்வேறு ஊர்களில் திருவிழாக்கள் ஆரம்பிக்க உள்ளதால் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஒரு கோடியை தாண்டி வர்த்தகம் நடைபெறும் எனவும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | இபிஎஸ் பெயரிலேயே அனைத்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டனவா..?!