பணிக்கு சேர்ந்து இரண்டே நாட்களில் ஊழியருக்கு நேர்ந்த சோகம்...!

பணிக்கு சேர்ந்து இரண்டே நாட்களில் ஊழியருக்கு நேர்ந்த சோகம்...!

சென்னையில் உள்ள தனியார் உணவகத்தின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.  

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு (27). இவர் தி.நகர் நாயர் சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சப்ளையராக பணிக்குச் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று, பாபு உணவகத்தில் சாப்பிட வந்த நபர்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, வாடிக்கையாளர்களுக்கு உணவு எடுக்கச் சென்ற போது, பாபு கடையின் இரும்பு ஷட்டர் மீது கை வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு ஷட்டரில் இருந்து மின் கசிவு காரணமாக பாபு மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் பாபுவை மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பாபுவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பாண்டி பஜார் போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் உணவகத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி மின்சாரம் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : என்னது ‘வாரிசு’ பொங்கலுக்கு வெளியாகவில்லையா?- ரசிகர்கள் குமுறல்...