பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் பயிற்சி முகாம்...! தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!

பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் பயிற்சி முகாம்...! தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் மேற்கு மண்டல முகாம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 300 சாரனர்கள், 300 சாரணியர்கள், 100 ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட 750 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் கொடியை ஏற்றி, துவக்கி வைத்தனர்.

அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களிடையே நல்லொழுக்கம், நாட்டு பற்று, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகிய நற்பண்புகளை வளர்ப்பது சாரணிய இயக்கம். மேலும் தமிழக முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல அளவில் நடத்துவதற்காக பள்ளி மானியக் கோரிக்கையில் 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார் என கூறினார். 

இதனைத் தொடர்ந்து ராணுவத்தில் பணிபுரிபவர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளியை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் 
நல்ல சமுதாயத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும், அதற்காக நல்ல ஒழுக்கம் , நாட்டு பற்று, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை  வளர்ப்பது ஆசிரியர்களிடம் உள்ளது என்றும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளில் கல்வியை மேம்படுத்த இந்த ஆய்வு  உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com