பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி ஊழியர்கள் இரண்டு நாள் விடுப்பு போராட்டம்...

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி ஊழியர்கள் இரண்டு நாள் விடுப்பு போராட்டம்...

திருவாரூர் மாவட்டத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 866 ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து இரண்டு நாள் போராட்டம் அறிவித்து இரண்டாவது நாள் போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

திருவாரூர் மாவட்டம் :

மேலும் தெரிந்து கொள்ள | சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு...

திருவாரூர், நன்னிலம் ,குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ,வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி என பத்து ஒன்றியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் 866 ஊழியர்கள் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி  நேற்றும்  இன்றும்  தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

பத்து அம்சக்  கோரிக்கை :

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறையில் ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள் ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

மேலும் தெரிந்து கொள்ள | இந்துக்கள் மட்டும் தான் கடைகள் வைக்கலாம்!- அதிரடி பேனரால் அதிர்ச்சி...


மக்கள் நலன் கருதி பெரிய ஊராட்சிகளை பிரித்து 25 ஊராட்சிகள் உள்ளடக்கியதை ஒரு ஊராட்சி ஒன்றியம் என உருவாக்க வேண்டும்.


உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

90% ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிகள் நடைபெறாமல் முடங்கிப் போய் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியஅலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்,ஊரக வளர்ச்சித்  துறை ஊழியர்கள் நாளை பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.