2 வாரத்தில் அரசு வேலை வழங்கப்படும் உதயநிதி - மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி

இரண்டு வாரத்தில் அரசு வேலை வழங்கப்படும் என உதய அண்ணா கூறியது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக உலகக் கோப்பை வென்ற மாற்றுத்திறனாளி கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் வினோத்பாபு பேட்டியளித்தார்

2 வாரத்தில் அரசு வேலை வழங்கப்படும்  உதயநிதி   - மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி

 ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்பாபு, 34,. இவரது தலைமையிலான மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை வினோத்பாபு பெற்று சாதனை படைத்துள்ளார். சொந்த நாடு திரும்பிய கேப்டன் வினோத்பாபு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து இன்று பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ( திமுக)  சந்தித்து வாழ்த்து பெற்றார்

மேலும் படிக்க | பொங்கல் சிறப்பு பேருந்து - போக்குவரத்துத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை

கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டேன். அப்போது பயண செலவுக்கு கூட காசு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். உடனடியாக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பை வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளோம், உலக கோப்பையுடன் தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன், அப்போது 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற போது மு.க. ஸ்டாலின் தனக்கு அரசு வேலை வழங்கப்படும் உறுதி அளித்தார். 2018 ல் சந்தித்து பேசிய நிகழ்வினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதல்வர் ஸ்டாலின் ஞாபகப்படுத்தினார். இதனை அடுத்து இரண்டு வாரத்தில் தங்களுக்கு அரசு வேலை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். இது மிகவும் சந்தோஷமாக உள்ளது. தொடர்ந்து லண்டனில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளேன் என கூறினார்.

மேலும் படிக்க |கோயில் அருகில் இயங்கி வரும் மதுபானக்கடை...! அகற்ற கோரிய வழக்கு விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ள உரிய மைதானம், உபகரணங்கள் இல்லை. பயிற்சி மேற்கொள்வதற்காக தினசரி 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்திற்கு சென்று வருகிறேன். இதனால் கூடுதல் பணசெலவு, நேர விரயம் ஏற்படுகிறது. வீட்டில் போதுமான இடவசதி இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள சிரமப்படுகிறேன். எனவே சொந்த கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ள உபகரணங்கள், மைதானத்தை ஏற்படுத்தி தர தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுத்துள்ளார்.