அறுவடை செய்யப்படாத பயிர்கள்... கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்... காரணம் என்ன?!!

அறுவடை செய்யப்படாத பயிர்கள்... கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்... காரணம் என்ன?!!

சூளகிரி வட்டார பகுதிகளில் தொடர்ந்து கால்நடைகளுக்கு தீவனமானகும் தக்காளி , புதினா , கடும் விலை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயிரிடப்படும் பயிர்கள்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலத்தில் அதிக அளவில்  புதினா , கொத்தமல்லி, தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.  அறுவடை செய்யப்படும் காய்கறிகள், மற்றும் கீரைகள் ஆந்திரா , கர்நாடகா, மற்றும் இதர மாவட்டளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. 

விலை சரிவு:

இந்நிலையில் சூளகிரி வட்டார பகுதிகளில் புதினா , தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக தினசரி சந்தையில் அவற்றின் விலையானது கடும் சரிவை அடைந்ததாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.  கடந்த மாதத்தில் விவசாயத்தில் நல்ல இலாபம் அடைந்த விவசாயிகள், தற்போது கீரைகள் மற்றும் காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் கடும் சரிவை அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

கால்நடை தீவனம்:

இதனால் விவசாயத்தில் பெரிதும் இலாபம் கிடைக்காத நிலையில் விவசாயிகள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த புதினா மற்றும் தக்காளி விவசாய நிலத்திலே விட்டு வைத்துள்ளனர்.  இவ்வாறு விவசாய நிலத்தில் விடப்பட்ட தக்காளி, புதினா, கொத்தமல்லி, கீரைகள், முட்டைகோஸ் உள்ளிட்டவை கால்நடைகளுக்கு தீவனமானக்கப்பட்ட சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கை:

இந்த நிலையில் விவசாயத்தில் கடும் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் இதற்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:   கணக்கு தேர்வு பயத்தில் தீக்குளித்த மாணவி...!!