பள்ளியில் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள்...

உசிலம்பட்டியில் பள்ளி படிப்பை பாதியில் விட்ட பழங்குடியின மாணவர்கள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.  
பள்ளியில் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள்...
Published on
Updated on
2 min read

மதுரை : உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 70க்கும் அதிகமான மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்., இந்த மக்கள் அடிக்கடி மூலிகை பொருட்களை சேகரிக்க மலைப்பகுதிக்கு சென்று விடுவதால் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது தடைபடுவதாகவும், இதனால் அதிகமான மாணவர்கள் இடைநிற்றல்கள் ஆனதாக கூறப்படுகிறது.

உசிலம்பட்டி அருகே இடை நிற்றல் ஆன மலைவாழ் பழங்குடியினர் மக்களின் குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 70க்கும் அதிகமான மலைவாழ் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர்.

இது குறித்து கடந்த மாதம் குறிஞ்சி நகர் பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் இடைநிற்றல் ஆன குழந்தைகளை படிக்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவின் பேரில் இன்று குறிஞ்சி நகர் பகுதியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமின் மூலம் இடைநிற்றல் ஆன 7 மாணவ மாணவிகளை கண்டறிந்து மீண்டும் வாசிநகர் ஆரம்ப பள்ளியில் சேர்த்தனர். இம்முகாமில் வருவாய்த்துறை மற்றும் தாட்கோ சார்பில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com