அட்டகாசம் செய்த குரங்குகள்... கூண்டு வைத்து பிடித்த அதிகாரிகள்...

அரசு பள்ளியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில் வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

அட்டகாசம் செய்த குரங்குகள்... கூண்டு வைத்து பிடித்த அதிகாரிகள்...

கிருஷ்ணகிரி : வேப்பனப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் பள்ளியில் அட்டகாசம் செய்வதாக கிருஷ்ணகிரி வனசரகர் மகேந்திரன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

மேலும் படிக்க | வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை...பொதுமக்கள் அவதி...!

இதையடுத்து மகேந்திரன் வனசரகர் தலைமையில் வேப்பனப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட குரங்குகளை வனவர் அண்ணாதுரை, வனகாப்பாளர் அசோகன் மற்றும் பழனிசாமி ஆகியோர் இணைந்து கூண்டுகள் அமைத்து குரங்ககளை பிடித்தனர்.

மேலும் படிக்க | குரங்கு குட்டிகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்!

பல மாதங்களாக பள்ளியில் மாணவிகளிடமும் ஆசிரியர்களிடமும் அட்டகாசம் செய்து கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து வேப்பனப்பள்ளி காப்புக்காட்டில் பாதுகாப்புடன் விட்டனர்.

நீண்ட நாட்களாக பள்ளியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த குரங்குகளை பிடித்ததால் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் நிம்மதி அடைத்துள்ளனர்.

மேலும் படிக்க | யானை தந்தம் பதுக்கிய இருவர் கைது...