வேதாரண்யம் : கடல் போல் காட்சி அளிக்கும் உப்பளங்கள்...! உப்பு உற்பத்தி தீவிரம்...!

வேதாரண்யம் : கடல் போல் காட்சி அளிக்கும் உப்பளங்கள்...! உப்பு உற்பத்தி தீவிரம்...!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த 2 வாரத்திற்கு முன்பு  உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. 

உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் உப்பள பகுதிகளில் உள்ள உள்வழி சாலைகள் சேதமடைந்த காரணத்தால் உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்று தொடர் மழை நின்று வெயில் அடிக்க தொடங்கி இருப்பதால் உப்பு பாக்கெட் போடும் பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது குறைந்த அளவில் லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உற்பத்திக்கான இலக்கு 6 லட்சம் டன் எட்ட முடியாத நிலையில் அடுத்து வரும் மாதத்தில் உப்புக்கு நல்ல விலை கிடைக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தற்போது  ஒரு டன் உப்பு ரூ. 2,400  முதல் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உற்பத்தி செய்த உப்பை சேமித்து பிளாஸ்டிக் பாய் மற்றும் பனை ஓலைகளை வைத்து மூடி பாதுகாத்து வருகின்றனர். உப்பளங்களில்  மழை நீர் தேங்கியுள்ளதால் உப்பள தொழிலாளர்கள் வலை விரித்து மீன் பிடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : அடடா மழடா... அடமழடா. பேருந்துக்குள் கொட்டிய அருவி...