உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்...

வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியது.

உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்...

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு மழையின் காரணமாக ஆக்டோபர் மாதம் உப்பு உற்பத்தி சீசன் முடிவுற்றது. மீண்டும் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி துவங்குவதற்காக முதல்கட்ட பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 2050 கிலோ மாவில், 1 லட்சம் வடைகள் கொண்டு அனுமனுக்கு வடை மாலை...

வேதாரண்யம் பகுதியில் பருவமழை நின்று வெயில் அடிக்க தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணிகளான மழைநீரை வடிய வைத்தல், சேற்றை அகற்றுதல், பாத்திகள் அமைத்தல், மின்சார மோட்டார்கள் சரி செய்தல் போன்ற முதல் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நூற்று கணக்கான மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஈடுபட்டுள்ளனர்.

சென்ற ஆண்டு உப்பிற்கு நல்ல விலை கிடைத்தும் அடிக்கடி மழை பெய்ததால்   6 லட்சம் டன் இலக்கை எட்ட முடியாத நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி இலக்கை எட்ட உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் இரவு பகலாக உப்பள பகுதிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். முதல் கட்ட பணிகள் நிறைவுற்று இன்னும் 15 நாளில் உப்பு உற்பத்தி துவங்கிவிடும்  என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 50வது ஆண்டு இராஜாஜி நினைவு தினம்: அமைச்சர்கள் மரியாதை...!