சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிராம மக்கள் புகார்...

பண்ருட்டி அருகே சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிராம மக்கள் புகார்...
Published on
Updated on
2 min read

கடலூர் | பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அப்பகுதி சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட பாக்கெட் சாராயம், ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதால், அப்பகுதியில் சாராயம் கேட்டு வெளி ஊரைச் சேர்ந்த நபர்கள் ஊருக்குள் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சாராயம் கிடைக்கக்கூடிய இடங்களை மேப் போட்டு விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருட்டு விபத்து ஏற்படுகிறதாகக் கூறப்படுகிறது. இதில் அதிகப்படியாக இளைஞர்களே சாராயம் கஞ்சா ஹான்ஸ் பொருட்களை அப்பகுதியில் வந்து வாங்கி செல்கின்றனர் என்று கூறுகின்றனர்.

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பண்ருட்டி காவல் நிலையம் மற்றும் கலால் போலீசிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை  எடுக்கவில்லை என்று மேல் கவரப்பட்டு அப்பகுதிச் சேர்ந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி சாராயப் பாக்கெட்டு கவர்களை கொண்டு வந்து பண்ருட்டி காவல் நிலையம் முன்பு கொட்டி முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் கூறுகையில் 

தொடர்ந்து எங்க ஊரில் சட்டவிரோதமாக பாக்கெட்டு சாராயம் ஹான்ஸ் கஞ்சா போதைப் பொருள்கள் விற்று வருகின்றனர் இது சம்பந்தமாக பலமுறை காவல்நிலத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காததால் தற்போது ஊர் மக்கள் ஒன்று கூடி சாராயம் பாக்கெட்களை காவல் நிலையம் முன்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்களா

என்ற ஒரு கேள்வி எழுப்புகின்றனர். மேலும், மேல்கவரப்பட்டு மட்டுமின்றி  பண்ருட்டி பகுதியில் பல இடங்களில் சட்டவிரோதமாக  கஞ்சா,சாரயம், ஹான்ஸ்,விற்று வருகின்றனர். இதனால் பல இடங்களில் சட்ட ஒழுங்கு அடிதடி பிரச்சினை போன்றவை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com