வீணாகி போன தார்சாலை...! பாழாய்போன மக்கள் பணம்...! ஒரே இரவில் அதிகாரிகள் காட்டிய மாயாஜாலம்...!!!

வீணாகி போன தார்சாலை...!  பாழாய்போன மக்கள் பணம்...! ஒரே இரவில் அதிகாரிகள் காட்டிய மாயாஜாலம்...!!!

வேலூர் மாவட்டத்தில் ஒரே இரவில் போடப்பட்ட சாலை ஒரு மாதத்திற்குள்ளாகவே பழுதடைந்ததால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  

வேலூர் மாவட்டத்தில் அதிகப்படியான போக்குவரத்து நிறைந்த  காட்பாடியில் உள்ள இந்த திருப்பதி வேலூர் தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் காணப்பட்டதால் பல முறை இதை சரி செய்ய சொல்லி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் காட்பாடி வருவதாக இருந்தார். இந்நிலையில் முதலலமைச்சர் வருகைக்காக  ஒரே நாள் இரவில் வேக வேகமாக சாலை போடப்பட்டது.

ஆனால் இந்த சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் சாலை போட்ட நாளில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக பெயர்ந்து வந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிறீரமத்திற்கு உள்ளாகினர். எனவே இந்த சாலை தொடர்பாக தினந்தோறும் புகார் எழுந்ததை ஒட்டி மீண்டும் தற்போது அதே இடத்தில் புதிய சாலை போடப்பட்டு வருகிறது. 


கடந்த மாதம் முதலமைச்சர் வருவதை யொட்டி இரவோடு இரவாக கண்கட்டு வித்தை போல் போடப்பட்ட சாலை போட்ட வேகத்தில் ஆங்காங்கே  உதிரி உதிரியாய் பெயர்ந்து போனது மக்களிடையே அதிகாரிகள் கொந்தளிப்பை ஏற்படுத்தியள்ளது. மேலும் மக்களின் வரிப்பணம் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். இந்த முறை போடப்படுகின்ற சாலையாவது திடமான சாலையாகவும் தரமான சாலையாகவும்  இருக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள்.