மனிதாபிமான வளர்ச்சி வேண்டும் -கொளத்தூர் மணி...!!

மனிதாபிமான வளர்ச்சி வேண்டும் -கொளத்தூர் மணி...!!
Published on
Updated on
1 min read

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பழைய பேப்பர் என்ற சிறுகதை புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நித்யா இறையன்பு அவர்கள் எழுதிய 'பழைய பேப்பர்' என்ற சிறுகதை புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி அறிவியல் பார்வையுடன் மனிதாபிமானத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் அனைவரும் வாசிப்பதற்காகவே இது போன்ற புத்தக வெளியீட்டு விழாக்கள் நடைபெறுவதாக தெரிவித்த அவர் மறுமணம் என்பதில் எந்த ஒரு தவறும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும் தற்போதைய காலத்துக்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பில் விற்பனைக்காக வைத்திருந்த அறிவு சார்ந்த புத்தகங்களை வாங்கி சென்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com